தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்.! திமுக எம்பி கனிமொழி கண்டனம்.!
பொதுவாக எதிர்க்கட்சி தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு எதிர்க்கட்சி போல ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். – கனிமொழி எம்.பி கண்டனம்.
நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார்.
இந்த நிகழ்வு குறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், பொதுவாக எதிர்க்கட்சி தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு எதிர்க்கட்சி போல ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். இது மரபு மீறல்.
பொதுவாக, மத்திய அரசு எழுதி கொடுப்பதை தான் குடியரசு தலைவர் படிக்கிறார் . அதே போல தான் மாநில அரசு எழுதி கொடுப்பதை ஆளுநர் படிக்க வேண்டும். என குறிப்பிட்ட கனிமொழி மேலும் கூறுகையில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து மாநில அரசுக்கு மத்திய அரசு இடையூறு விதித்து வருகிறது. ஆளுநர் பதவியையே எதிர்க்கட்சி பதவி போல மாற்ற நினைக்கிறார்கள். என தனது கண்டனத்தையும் திமுக எம்பி கனிமொழி கூறினார்.