ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்..!
தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னையில் மாநில கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரை குறித்தும், ஆளுநரின் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னையில் மாநில கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தமிழ் வாழ்க என்ற பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.