இன்று இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி!
இன்று இலங்கை இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி.
மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இலங்கை அணி. முதலில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று குவஹாத்தி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
உடல் தகுதியை எட்டியதாக அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா மீண்டும் விலகினார். இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற சோகமான சாதனைக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. மறுபக்கம், டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.