நீண்ட நாட்களுக்கு பின் என் அன்பு நண்பரை சந்தித்தேன்..! ரஜினிகாந்த் ட்வீட்..!
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஜெயிலர் படபிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட நாட்களுக்குப் பின்பு என் அன்பு நண்பரே சந்தித்து மரியாதை அளித்தது ஒரு மறக்க முடியாத நேரமாக கழிந்தது என்று அவர் பதிவிட்டுள்ளார்.