தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, விதிகளைப் பின்பற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல்.,!
தொலைக்காட்சி நிறுவனங்கள் கண்ணியத்துடன் செயல்படுமாறு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிடும்போது, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, குறிப்பாக விபத்துகள், இறப்புகள், மற்றும் பெண்கள் குறித்த வன்முறை போன்ற அதிக உணர்ச்சிபூர்வமான செய்திகளை வெளியிடும் போது கண்ணியத்துடன் வெளியிடுமாறு கூறப்பட்டுள்ளது.
பல நேரங்களில் வீடியோக்கள், சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு, அப்படியே ஒளிபரப்பப்படுகிறது, இதனால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விதிகளைப் பின்பற்றி செய்திகளை வெளியிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.