கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, குறித்த புத்தகம் வெளியிட நீதிமன்றம் தடை.!
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குறித்த புத்தகத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றிய ‘சித்து நிஜ கனசுகள்’ புத்தகத்தை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹித் சக்ரதீர்த்தா எழுதிய சித்து நிஜ கனசுகள் புத்தகத்தை வெளியிட பாஜக திட்டமிட்டிருந்தது.
சித்தராமையா பற்றி, இழிவுபடுத்தும் வகையில் இந்தப் புத்தகம் இருப்பதாக அவரது மகன் யதீந்திர சித்தராமையா, மனுதாக்கல் செய்திருந்தார், இதனையடுத்து இந்த புத்தகத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தன்னை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் புத்தகம் உள்ளது என்றும், இது அவதூறானது என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, தவறான ஆட்சி மற்றும் அவரது சமாதான அரசியல் குறித்து புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன, மேலும் ஆட்சிக் காலத்தில் நடந்த சில சர்ச்சைக்குரிய மற்றும் வகுப்புவாத உணர்ச்சிகரமான சம்பவங்களும் இந்த புத்தகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.