தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிட்டோரியஸ், திடீர் ஓய்வு முடிவு.!
தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர், டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் டி20 மற்றும் பிற குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவகற்காக, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக டுவைன் பிரிட்டோரியஸ் அறிவித்துள்ளார். பிரிட்டோரியஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக, 30 டி20, 27 ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
அவர் இரண்டு உலகக் கோப்பைகளில் தென்னாப்பிரிக்காவிற்காக விளையாடியுள்ளார், மற்றும் டி-20 களில் பாகிஸ்தானுக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்ததன் மூலம், தென்னாப்பிரிக்காவுக்காக சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
சுதந்திரமாக இருப்பதன்மூலம், சிறந்த குறுகிய வடிவ கிரிக்கெட் வீரராக இருக்க இது உதவும், மேலும் கிரிக்கெட் மற்றும் எனது குடும்ப வாழ்க்கைக்கு சரியான நேரம் செலவழிக்கமுடியும் என்று பிரிட்டோரியஸ் கூறினார். பிரிட்டோரியஸ், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பிரிட்டோரியஸ், தென்னாப்பிரிக்காவிற்காக அறிமுகம் ஆனார். டெஸ்ட் போட்டிகளில் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் பிரிட்டோரியஸ், உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும், அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது, கிரிக்கெட்டிற்காக என்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்தேன், தற்போது நான் தென்னாப்பிரிக்க (புரோடீஸ்) அணியை விட்டு வெளியேறுகிறேன் என்று மேலும் கூறினார்.