மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா..வைரலாகும் வீடியோ.!
நடிகை சமந்தா தற்போது இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதற்கு விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகை சமந்தா, இயக்குனர் குணசேகர் , தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் குணசேகர் ” இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என கூறினார்.
மேடையில் கண்கலங்கிய சமந்தா – வைரலாகும் வீடியோ!#Samantha | #Shakunthalamtrailer | #Shakunthalam pic.twitter.com/tFiHtEyDyj
— CineBloopers (@CineBloopers) January 9, 2023
இதனால் சற்று எமோஷனலான சமந்தா மேடையில் கண்ணீர் விட்டு ஆலா தொடங்கினார். பிறகு கையில் வைத்திருந்த பேப்பர் கைக்குட்டையை வைத்து கண்ணை துடைத்துக்கொண்டார். மேலும் விழாவில் பேசிய சமந்தா ” “சாகுந்தலம்” திரைப்படம் எதிர்பார்த்தபடி வெளியாகவேண்டும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இன்னும் இழக்கவில்லை . படத்தை பாருங்கள் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவும், அவர் கண்கலங்கிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
We’re with you sam ???????? be strong@Samanthaprabhu2#SamanthaRuthPrabhu #SamanthaRuthPrabhu #Samantha #ShaakuntalamTrailer #Shaakuntalam pic.twitter.com/lij2a6rTeW
— RoshSam???? (@RoshSamLover) January 9, 2023