பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை, தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!
பிரதமர் மோடி, 3 நாள் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை இந்தூரில் தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் 3 நாள் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார். கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, முதன்முறையாக நான்கு ஆண்டுகள் கழித்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பேசிய மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வையை வலுப்படுத்த, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். நீங்கள் அனைவரும் “ராஷ்டிரதூட்கள்” என்று கூறிய அவர், மேக் இன் இந்தியா திட்டம், யோகா, கைவினைத் தொழில் மற்றும் இந்தியாவின் தினைகளின் பிராண்ட் தூதராக நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்று மோடி மேலும் கூறினார்.
இந்த ஆண்டு பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்வின் முக்கிய “தீம்” (கருப்பொருள்) ஆக, “புலம்பெயர்ந்தோர் – அமிர்த காலில்(Amrit Kaal) , இந்தியாவின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையானவர்கள்” என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.