மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை.!உயர்நீதிமன்றம் உத்தரவு.!
மின்சார ஊழியர்கள் நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்த வேலைநிறுத்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழக அரசி சார்பில் வாதிடுகையில், ‘ மின்சார ஊழியர்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்றால் 6 வாரத்திற்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பி வைக்க வேண்டும். ‘ என்று வாதிடப்பட்டது.
மேலும், மின்சார ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அது அத்தியாவசிய பாதிப்பாக மாறிவிடும். பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்று, மின்சார ஊழியர்கள் நாளை முதல் அறிவித்துள்ள போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.