உத்தரபிரதேசத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக சாலை விபத்து! 3 பேர் பலி, 18 பேர் காயம்.!
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிப்ராலி கிராமத்தில், ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11வயது குழந்தை உட்பட, 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து 30 பயணிகளுடன், பேருந்து புறப்பட்டு சுல்தான்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது, மேலும் உயிரிழந்தவர்கள் ரேபரேலியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.