ஓடிடி-யில் சுதந்திரம் இல்லை… இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு…!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடந்து வரும் இந்த விழாவிற்கு பிரபல இயக்குனரான வெற்றிமாறன் வருகை தந்திருந்தார்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ” கிட்டத்தட்ட ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடி தளங்கள் ஒரு பெரிய சுதந்திரமாக எனக்கு தோன்றியது. ஆனால், இப்போது எனது அனுபவத்தில் வெளிப்படையாகவே சொல்கிறேன், தியேட்டர் அனுபவத்தில் இருக்கும் சுதந்திரம், வேறு எந்த வடிவிலும் வரவே வராது.
மக்களுக்கான சினிமா, அதனுடைய முழு சுதந்திரம், மக்களுக்காக எடுக்கப்பட்டதை மக்களிடம் திரையிடும்போதுதான் இருக்கும். எனவே தியேட்டர் அனுபவத்தில் இருக்கும் சுதந்திரம் தான் நல்லது என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- மக்கள் நல்லதை மட்டும் ரசிக்கிறார்கள்… வடிவேலு படத்தின் தோல்வி குறித்து பேசிய பிரபல நடிகர்.!
மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் விஜய் சேதிபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.