அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்,‌ மிகுந்த கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். 

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார் எனவும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த நிலையில், ஆளுநரின் செயல்பாடு குறித்து கே.,பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்‌ என முதலமைச்சர் பேசியுள்ளார. அரசின் கொள்கை‌ உரையே‌ அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும்‌ என்பது‌ சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.

தமிழ் நாடு முதலமைச்சரின்‌ இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத‌து. அரசியல் சாசன வரம்பினை மீறி‌ தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான‌ பதிலடி.

முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார்‌. தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார்.‌ எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்,‌ மிகுந்த கண்டனத்திற்குரியது.

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம்.‌ சட்டமன்றத்தில்‌ எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.‌ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌,‌ அனைத்து கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்