ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர்.
ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த இருவேறு வழக்குகளில் கடந்த ஆண்டு ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் தாக்கல் செய்தார். ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கு தொடர்பாக 450 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் மற்றொரு வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக 340 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.