நீட் தேர்வு அழுத்தம்.! சென்னையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

Default Image

சென்னை, ஆவடியில் நீட் தேர்வு அச்சத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவ படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு அண்மைக்காலமாக நீட் தேர்வு எனும் அகில இந்திய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்தி அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமலும், அதற்கு பயந்தும் பல மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்த தற்கொலைகள் தொடர்ந்து வரும் பலருக்கும் வேதனையளிக்கிறது.

சென்னையை அடுத்த ஆவடியில் நீட் தேர்வு எழுத பெற்றோர்கள் தொடர் அழுத்தம் கொடுத்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலாஜி எனும்  12ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளான். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்