ஆளுநர் உரையை கேட்க வந்தோமே தவிர, முதல்வர் உரையை அல்ல – ஈபிஎஸ்
நாங்கள் ஆளுநர் உரையை தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை நாங்கள் கேட்க வரவில்லை என ஈபிஎஸ் பேட்டி.
சட்டப்பேரவையில் முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த ஆண்டும் ஆளுநரையில் புதிய திட்டங்கள் இல்லை.
ஆளுநர் உரை மக்களுக்கு ஏமாற்றத்தை தான் அளித்துள்ளது. முதல்வர் அவ்வாறு பேசியது அவை மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது. நாங்கள் ஆளுநர் உரையை தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை நாங்கள் கேட்க வரவில்லை என தெரிவித்துள்ளார்.