புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் 35 மாடுபிடி வீரர்கள் காயம்.!
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 35 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு இந்தாண்டு பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெற ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போட்டி தொடங்கியது.
போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 35 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் சுமார் 300 காளைகள் விளையாட்டு அரங்கில் விடப்பட்டதாகவும், குறைந்தது 500 மாடுபிடி வீரர்கள் காளைகள் அடக்குவதற்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.