மாமல்லபுரம் அருகே துணைநகரம் – ஆளுநர் அறிவிப்பு
தற்போதுள்ள சென்னை பெருநகர் 5 மடங்காக விரிவாக்கம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரை.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி உரையாற்றி வரும் ஆளுநர் ஆர்என் ரவி, மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும் என அறிவித்தார். தற்போதுள்ள சென்னை பெருநகர் 5 மடங்காக விரிவாக்கம் செய்யப்படும் என ராசு அறிவித்துள்ளது.
5,904 சதுர கி.மீ பரப்பளவில் சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை பெருநகரின் அருகிலேயே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் தெரிவித்தார்.