பரபரப்பு : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொங்கல் வெட்டி-சேலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள், ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.