பணிநீக்கம் செய்யும் மெக்டொனால்டு .. ஏப்ரல் மாதத்தில் தொடக்கம்..!
புகழ்பெற்ற உணவு நிறுவனமான, மெக்டொனால்டு ஏப்ரல் மாதத்தில் பணிநீக்கங்களை தொடங்கவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், பணிநீக்க செயலை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக மக்களிடையே பிரபலமான மெக்டொனால்டு நிறுவனமும், பணிநீக்கத்தை தொடங்கவுள்ளது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கூறியுள்ளார்.
மெக்டொனால்டின் (McDonald) பணிநீக்கங்கள் தொடர்பான தகவல்கள் ஏப்ரல் 2023க்குள் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். மெக்டொனால்டின் (McDonald) பணிநீக்கங்களுக்கு ஒரு முக்கிய காரணம் செலவுக் குறைப்பு என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2,00,000 கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.