சீன பொம்மை தயாரிப்பாளர்களுக்கு உரிமம் கிடையாது- பிஐஎஸ் இயக்குநர்.!
எந்தவொரு சீன பொம்மை தயாரிப்பாளருக்கும் தரஉரிமம் வழங்கப்படவில்லை என பிஐஎஸ் (BIS) இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி கூறியுள்ளார்.
இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி இது குறித்து கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய தரநிலை உரிமத்திற்கு 160 சீன பொம்மை தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர், இருப்பினும் எந்த ஒரு சீன நிறுவனமும் இன்று வரை பிஐஎஸ் (BIS) தரஉரிமம் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு பொம்மைகளை இறக்குமதி செய்ய உரிமம் சீன நிறுவனத்திற்கு இல்லை எனவும் உரிமம் வேண்டுமென்று எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை என்றார்.
சீன பொம்மைகளின் செயல்பாட்டை குறைப்பதற்கு, ‘மேட் இன் சைனா’ (Made in China) பொம்மைகளை மக்கள் கண்டால், உடனடியாக பிஐஎஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிகழ்சியில் அவர் கூறினார். இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் மால்களில் உள்ள பொம்மை கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.