இந்திய அணி தேர்வுக்குழு தலைவராக சேத்தன் ஷர்மா நியமனம் – பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் ஷர்மாவை நியமித்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணியின் புதிய ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், இந்திய அணியின் தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக சேத்தன் சர்மா நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழுவின் மற்ற நான்கு உறுப்பினர்கள், சிவசுந்தர் தாஸ், சுப்ரோதோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் சரத் ஆகியோர் அடங்குவர். கடந்த நவம்பர் 18 அன்று இந்திய அணியின் தேர்வு குழுவின் ஐந்து பதவிகளுக்கான சுமார் 600 விண்ணப்பங்களைப் பெற்றதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.