ரிஷப் பந்திற்கு, 3 மணி நேர அறுவை சிகிச்சை நிறைவு.!
மும்பையில் ரிஷப் பந்திற்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த்தின் கார் கடந்த வாரம் விபத்திற்குள்ளானதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்றார்.
இந்த நிலையில் ரிஷப் பந்திற்கு, மூன்று மணிநேர முழங்கால் தசைநார் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சை முடிந்து அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார், தொடர்ந்து பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவால் பந்திற்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.