இரண்டு படங்களும் நன்றாக ஓட வேண்டும்… ‘துணிவு’ இயக்குனர் விருப்பம்
நடிகர்கள் அஜித் -விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானலே எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதை சொல்லியே தெரியவேண்டாம். இதில் இரண்டு திரைப்படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் அதனுடைய கொண்டாட்டத்தை பற்றி சொல்லியா..? தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல தான் இருக்கும்.
அந்த வகையில், கிட்டத்தட்ட 9 -ஆண்டுகளுக்கு பிறகு அஜித் -விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் வரும் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்- விஜய் மட்டும் இல்ல அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்…அந்தர் பல்டி அடித்த சரத்குமார்.!
இரண்டு படமும் பெரிய படம் என்பதால், இதில் எந்த படம் அதிகம் வசூல் செய்து சாதனை படைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெற்றிபெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” பொங்கலுக்கு வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிறது . இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்பதால் இரண்டு படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே இரண்டு படங்களும் செம ஹிட் ஆகவேண்டும்” என கூறியுள்ளார்.