பாஜக நமது கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை – கே.எஸ்.அழகிரி
தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லி தர வேண்டாம் என கே.எஸ்.அழகிரி பேட்டி.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு கண்டனங்களும் வலுத்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லி தர வேண்டாம். தமிழக பாஜக நமது கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.