படித்தவுடன் கிழித்து விடு.. 8-ம் வகுப்பு மாணவிக்கு ‘காதல் கடிதம்’ எழுதிய ஆசிரியர்!
உத்தர பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கொடுத்த காதல் கடிதத்தில், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னை மிஸ் செய்வேன், படித்தவுடன் இந்தக் கடிதத்தைக் கிழித்துவிடு, வேறு யாரிடமும் காட்டாதே என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.