அஜித்துடன் இணையும் கைதி பட பிரபலம்…’AK62′ படத்தின் தாறுமாறான அப்டேட்.!

Default Image

துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அஜித் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள “AK62” படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

AK62 Movie
AK62 Movie [Image Source: Twitter ]

படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.

Santhanam and Arvind Samy are both acting in Ak 62
Santhanam and Arvind Samy are both acting in Ak 62 [Image Source: Twitter ]

அந்த வகையில், நேற்று ஒரு தகவல் பரவியது, அது என்னவென்றால், “AK62” படத்தில் அஜித்திற்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகவும், நடிகர் சந்தானம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்களேன்- என் தங்கச்சி இதுக்காக தான் எனக்கு ஆதரவு கொடுக்கல…மனம் திறந்த மணிகண்டன்.!

ArjunDas onboard to play an important role in the AK 62 movie
ArjunDas onboard to play an important role in the AK 62 movie [Image Source : Google]

இதனை தொடர்ந்து படத்தில் மேலும் ஒரு பிரபலம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அவர் யார் என்றால், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் தான். இவரும் “AK62” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்