என்எல்சி நிர்வாகத்திற்கு உடந்தையாக மாவட்ட அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் – அன்புமணி
என்எல்சி நிர்வாகத்திற்கு உடந்தையாக மாவட்ட அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.
நெய்வேலி என்எல்சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளை காப்பாற்றுவதே அமைச்சர்களின் பணி.
என்எல்சி நிர்வாகத்திற்கு உடந்தையாக மாவட்ட அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். மக்கள், விவசாயிகளை காப்பாற்றுவதே அமைச்சர்களின் பணி. விளைநிலம், மண்ணை பாதுகாப்பதே வேளாண் துறை அமைச்சரின் பணி என தெரிவித்துள்ளார்.
மேலும், என்எல்சி சுரங்க பணிகளுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதே வேளாண் அமைச்சரின் பணி என தெரிவித்துள்ளார்.