ஆளுநர் பேச்சு – முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் : கே.பாலகிருஷ்ணன்
தமிழக ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், ஆளுநரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு கண்டனங்கள் வைத்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், தமிழக ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.