தயவு செஞ்சு சில்லறை தனமா இப்படி பண்ணாதீங்க…நடிகர் விமல் ஆவேசம்.!
நடிகர் விமலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல்கள் கசிந்துள்ளது. இதனையடுத்து, இது வெறும் வதந்தி தகவல் தான் எனவும், இந்த தகவலை நம்பாதீர்கள் எனவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் விமல் பேசியதாவது” எனக்கு நெஞ்சி வலி வந்ததால் நான் சிகிச்சை பெற்று வருவதாக செய்தீகள் வருகிறது. அது எல்லாம் வெறும் பொய்யான தகவல் தான். நான் ஆரோக்கயத்துடன் இருக்கிறேன். நான் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.
இதையும் படியுங்களேன்- நான் சினிமாவுக்கு வரலனா அந்த வேலைக்கு தான் போயிருப்பேன்…மனம் திறந்த பாடகி ராஜலட்சுமி.!
எனவே எனக்கு நெஞ்சுவலி எதுவும் இல்லை, இன்னொரு செய்தியையும் நான் பார்த்தேன் மதுவுக்கு அடிமையாகி, வீட்டிலே ரகசியாமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு தகவல் வந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப காமெடியா இருக்கு. இது போன்ற செயல்களை வேண்டாத விஷ கிருமிகள் சிலர் செய்கிறார்கள்.
இந்த மாதிரி வேண்டாத வேலைகள் யார் செய்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும், எனவே இதையெல்லாம் விட்டு விட்டு உழைக்கும் வழியை பாருங்கள். அதைவிட்டுடு சில்லறை தனமா இப்படி பண்ணாதீங்க” என சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.