இது பாஜகவுக்கும்,ஆளுநருக்கும் ஒருநாளும் புரியப்போவதில்லை – ஜோதிமணி எம்.பி
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்க்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்டர்பக்கத்தில், ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு. இது பாஜகவுக்கும்,ஆளுநருக்கும் ஒருநாளும் புரியப்போவதில்லை. ஏனென்றால் இந்த அடையாளத்தை அழிக்கவேண்டும் என்றுதான் அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை என பதிவிட்டுள்ளார்.