பயணிகள் பாதுகாப்பிற்கு பைலட் தான் பொறுப்பு.! விமான அமைச்சகம் கருத்து.!
பயணிகளுக்கு இணக்கமான அணுகுமுறைகளை வழங்கியும் அவர்கள் அதனையும் மீறி செயல்பட்டால், அவர்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – விமானத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
அண்மையில், அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண் மீது ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த சம்பவத்தை அடுத்து சிறுநீர் கழித்த எஸ் மிஸ்ரா என்பவரை அவர் வேலை செய்த கம்பெனி சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரை பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து விமானத்தில் பயணிகளைக் கையாள்வது குறித்து விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) ஆலோசனை வழங்கியுள்ளது.
விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கு விமானி (பைலட்) தான் பொறுப்பு. பயணிகளுக்கு இணக்கமான அணுகுமுறைகளை வழங்கியும் அவர்கள் அதனையும் மீறி செயல்பட்டால், அவர்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.