காந்தத்தை கொண்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்..!
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, சிறுமி விழுங்கிய காந்தத்தை, மற்றொரு திறன்மிக்க காந்தத்தை கொண்டு மருத்துவர்கள் எடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 9 வயது சிறுமி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பொம்மையொன்றில் இருந்த காந்தத்தை விழுங்கியிருக்கிறாள். இதனால், தொடர் இருமலாலும், மூச்சுத்திணறாலாலும் அவதியுற்ற சிறுமி, மங்களூருவில் உள்ள KMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வலது நுரையீரலுக்கு செல்லும் சுவாசக்குழாயில், அந்த காந்தம் சிக்கியிருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், மற்றொரு திறன்மிக்க காந்தத்தை சுவாசக்குழாயின் மேற்பரப்பில் வைத்து, சுவாசக்குழாயில் உள்ளே சிக்கியிருந்த காந்தத்தை மெல்ல மெல்ல நகர்த்தி, அதனை வெளியில் எடுத்து சாதனை படைத்தனர்.