சொகுசு கார் தான் வேணும்.. கல்யாணத்தை நிறுத்திய கல்லூரி விரிவுரையாளர்.! வழக்குப்பதிவு செய்த போலீசார்.!
உ.பியில் வரதட்சணையாக தான் கேட்ட கார் கிடைக்கவில்லை என்று தனது திருமணத்தை ஒரு கல்லூரி விரிவுரையாளர் நிறுத்தியுள்ளார்.
வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டமே இருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். அதிலும் படித்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபடுவது மனவேதனையை தருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தில் உள்ள செயல்படும் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்யும் ஒரு ஆசிரியர் ஒருவர், தான் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வீட்டாரிடம் வரதட்சணையாக ஃபார்ச்சூனர் எனும் சொகுசு காரை கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் மறுத்து வேகன்ஆர் காரை முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கோபமடைந்த அந்த கல்லூரி விரியவுரையாளர் ஜனவரி 30ஆம் தேதி நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது கல்லூரி விரிவுரையாளர் மீது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.