விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் கைது.!
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் போராட்டத்தில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் கமரெட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான விவசாயிகள், விவசாய நிலங்கள் தொழில் மண்டலத்தில் உள்ளதாகக் கூறி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை போராட்டம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும்போதே அவர் கைது செய்யப்பட்டார்.
போராட்டத்தின் படங்களைப் பகிர்ந்துள்ள மாநிலக் கட்சிப் பிரிவு, “செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மற்றும் பலர் காயமடைந்தனர்” என்று கூறினர். நகரின் வரைவு மாஸ்டர் திட்டத்தில் விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொழில் மண்டலத்தில் உள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தப்பட்டது.