ஒரு நாளைக்கு 180 சிகரெட் குடிப்பேன்… வெற்றிமாறன் கூறிய பகீர் தகவல்.!
சென்னையில் “சேவ் யங் ஹார்ட்ஸ்”எனும் தலைப்பில் இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சார நோக்கத்துடன் இதயத் திரைப்பட விழா குறும்பட போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பிரபல இயக்குனரான வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “நமது பிறப்பு தொடங்கி, இறப்பு வரை இயங்கும் இதயத்தை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும், எனவே இதற்காக உடற்பயிற்சி செய்வது மட்டுமே பிட்னெஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் சில மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இதையும் படியுங்களேன்- வாரிசு படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம் …உண்மையை உடைத்த ஷாம்.!
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 70 சிகரெட்டுகள் குடிப்பேன். பிறகு நான் இயக்குநர் ஆன பிறகு, 180 சிகரெட்டுகளும் குடித்தேன். அது மிகவும் தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி அதை விட்டு விட்டேன். நான் அதிகமாக சிகரெட் குடித்ததால் படங்களில் என்னால் 100% கவனம் செலுத்த முடியவில்லை. சுறு சுறுப்பாக ஓடியாடி வேலை செய்ய முடியாமல் போனது. இதனாலே விட்டுவிட்டேன்.
இனிமேல் நான் இயக்கும் படங்களில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளை முடிந்த அளவிற்கு தவிர்ப்பேன்” என கூறியுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.