5000 பள்ளி மாணவ மாணவிகளுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!
சென்னையில் சிற்பி திட்டத்தின் கீழ் இன்று 5,000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். சிற்பி என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக, சென்னை மாநகராட்சியில் செயல்படும் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து தவிர்க்கவும் இந்த சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்பி திட்டத்தின் கீழ் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 5,000 மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயற்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.