எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் – திமுக எம்பி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் மூலம் கோரிக்கை.
பொங்கல் பண்டிகை நாளில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜன.15-ல் எஸ்பிஐ வங்கி கிளர்க் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.