பழனி முருகன் கோவில் ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை..!
பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் கோவில் தலைமைக் குருக்கள் மற்றும் ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழனி முருகன் கோவில் ஐம்பொன்சிலை மோசடி தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா மற்றும் இந்து அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளனர்.
அதன்பின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கோவில் உதவி ஆணையர் புகழேந்தி மற்றும் தலைமை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பழனி வந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கருணாகரன் தலைமையிலான போலீசார், தலைமைக் குருக்கள் அமிர்தலிங்கம், தற்போதைய கோவில் கண்காணிப்பாளர் முத்துராஜ், முரளி மற்றும் ஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.