பெண் மீது சிறுநீர் கழித்தவர் பணி நீக்கம்…பெங்களூருவில் கைது!
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் பணியில் இருந்து நீக்கம்.
ஏர் இந்திய விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். வெல்ஸ் ஃபார்கோ என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சங்கர் மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கியது அந்நிறுவனம். விமானத்தில் குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது அதிர்ச்சி அளிப்பதாக வெல்ஸ் ஃபார்கோ என்ற பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தனது அருகில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் மீது சிறுநீர் கழித்த நபரை விமான பயண செய்ய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட எஸ் மிஸ்ரா பெங்களூருவில் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.