ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா? – கமலஹாசன்
ஆளுநரின் பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்ற சொன்னால் மாற்றிக்கொள்வாரா? என கமலஹாசன் கேள்வி.
ஒரு நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ‘நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்பு தான் தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதை மாற்ற செல்வதற்கு கவர்னர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்ற சொன்னால் மாற்றிக்கொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.