ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்..!
30 வயது ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது சிறுவன்
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் ஆசிரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தொடக்கப்பள்ளியில் 30 வயது ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ஆசிரியைக்கும் சிறுவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அவர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.