நூடுல்ஸ் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்..,

இன்றைய ஆடம்பர உலகில் அவரவர்கள் உண்ணும் உணவு வகைகள் சில நன்மை தருகின்றன.ஆனால் தீமை தரகூடிய உணவுகளே அதிகமாக இருகின்றன.அதில் குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் நூடுல்ஸ் ஆகும்.Image result for நூடுல்ஸ்
குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் குறைவு என்பதால் பசியை  அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். Image result for children eating noodles
மைதாவாலான நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளுட்டமேட்என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும் மேலும் இதய நோய்க்கும் வழிவகுக்கும்.
டயட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.கர்ப்பிணிகள் நூடுல்ஸை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. Image result for நூடுல்ஸ்
நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதன் விளைவாக மலக்குடல் புற்றுநோய் வர வழி வகுக்கும்  மேலும் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும். இத்தகைய கேடு விளைவிக்கும் நூடுல்ஸ்யை தவீர்த்து உடலுக்கு சரியான உணவை சாப்பிட வேண்டும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment