அமைச்சர் ராமசந்திரன் அவர்கள் இவ்விரு பேசியிருப்பது வெட்கக்கேடான செயல் – ஓபிஎஸ்
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என தெரிவித்திருந்தார்.
இதற்கு அதிமுக தரப்பில் கண்டங்கள் எழுந்து வரும் நிலையில், ஓபிஎஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற குறை சுட்டிக்காட்டி, திமுக பொதுக் கூட்டத்தில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கு கடும் கண்டங்கள் என தெரிவித்துள்ளார்.