பயனர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு.? பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,400 கோடி ரூபாய் அபராதம்.!
பயனர்களின் அந்தரங்க தகவல்கள் திருடு போனதற்காக மெட்டா நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் 3,416 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைத்தளங்கள் மீது ஹேக்கர்கள் புகுந்து தகவல்களை திருடுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அப்படி தான் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து பயனர்களின் அந்தரங்க முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மீது அயர்லாந்து அரசு குற்றம் சாட்டி அந்நாட்டில் மெட்டா நிறுவனத்திற்கு மெட்டா அயர்லாந்து அரசு 44.1 கோடி மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து.
இந்த அபராத தொகையில் இந்திய மதிப்பு 3,416 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த அபராதம் இதற்கு முன்னர் 3 முறை நிகழ்ந்துள்ளது. இதுவரை மெட்டா மீது அயர்லாந்து அரசு இந்திய மதிப்பீட்டில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.