தைத் திங்களில் தமிழர் பெருமை என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்
நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தைத் திங்களில் தமிழர் பெருமை என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, தமிழர்களின் பெருமையை தமிழ்நாடு அரசு எப்படி பறைசாற்றுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு.
நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான்; எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல், இளைய சமுதாயத்திற்கு இலக்கிய ஆர்வத்தை கொண்டுச் சேர்க்கவே இலக்கிய திருவிழாவை தொடங்கி வந்துள்ளார் முதலமைச்சர் என தெரிவித்துள்ளார்.