நிதி அமைச்சர் பதவி யாருக்கு.? போட்டிபோடும் இரு கட்சிகள்..!
நிதி அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளிடையே கடும் இழுபறி நிலவுகிறது.
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பொறுப்புகள் யார் யாருக்கு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு செய்த குமாரசாமி, நிதியமைச்சர் பதவியை தாமே வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மின்சாரத்துறையை தமது சகோதரர் ரேவண்ணாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், நிதியமைச்சர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு, காங்கிரஸ் கோரி வருகிறது.
அதேபோல், துணை முதலமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் சிவக்குமார், கடந்த முறை தாம் வகித்துவந்த மின்சார துறையே தற்போதும் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கர்நாடக அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.