கர்நாடகாவில் என்ஐஏ சோதனை.! தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக 2 பேர் உடனடி கைது.!
தீவிரவாத அமைப்புகளிடம் நிதியை பெற்றதாக கர்நாடக என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தீவிர சோதனையை அவ்வப்போது நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து சந்தேகத்திற்கிடமான நபர்களை கைது செய்தும் வருகிறது.
அப்படிதான் நேற்றும் கர்நாடகாவில் பலவேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, தாவணகெரே மற்றும் பெங்களூரு ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது உடுப்பியை சேர்ந்த ரெஷான் தாஜுதீன் ஷேக் மற்றும் சிவமொக்காவை சேர்ந்த ஹுசைர் ஃபர்ஹான் பைக் ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷேக் மற்றும் பைக் ஆகியோர் சேர்ந்து கிரிப்டோகரன்சி மூலம் தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதியை பெற்றுள்ளனர் என NIA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.