மருத்துவரை கத்தியால் குத்திய நோயாளி…! நோயாளியை கைது செய்த போலீசார்..!
மகாராஷ்டிராவின் யவத்மல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாச்ரா நாயக் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவரை கத்தியால் குத்திய நோயாளியை கைது செய்த போலீசார்.
மகாராஷ்டிராவின் யவத்மல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாச்ரா நாயக் அரசு மருத்துவக் கல்லூரியில், சூரஜ் தாக்கூர் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நோயாளியை பார்ப்பதற்காக வந்த மருத்துவரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அவரை காப்பாற்ற வந்த மருத்துவரையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சூரஜ் தாக்கூர் மனதளவில் நிலையற்றவர், இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னைக் குத்திக் கொண்டார். நேற்று இரவு குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.