தோல்விக்கு காரணம் நோ பால் தான் – கேப்டன் ஹர்திக் பாண்டியா குற்றச்சாட்டு!
இலங்கையிடம் இந்தியா 16 ரன்களில் தோல்வியடைந்த பிறகு, ‘நோ பால் ஒரு குற்றம்’ என்றார் ஹர்திக் பாண்டியா.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி சந்தித்தது. சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டும் சொதப்பிய நிலையில் தோல்வியை சந்தித்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அரஷ்தீப் சிங் ஹாட்-ட்ரிக் நோ-பால் வீசிய நிலையில் மொத்தமாக நேற்று நடைபெற்ற போட்டியில் 5 நோ-பால்கள் வீசி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளார். இதுவே தோல்விக்கு வழிவகுத்தது. அவரது இரண்டு ஓவர்களில் ஐந்து நோ பால்களை வீசினார், 37 ரன்கள் கொடுத்தார்.
இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் நமது பந்துவீச்சாளர்கள் ஏழு நோ பால்களை வீசி உள்ளனர் என்று குற்றச்சாட்டி வருகின்றனர். இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்விக்கு காரணம் நோ பால் தான் என தெரிவித்தார்.
இது அர்ஷ்தீப் சிங்கைக் குறை கூறுவது அல்ல, ஆனால் இளம் வேகப்பந்து வீச்சாளர் திரும்பிச் சென்று தனது அடிப்படை பிழைகளை சரிசெய்ய வேண்டும். நீங்கள் ஒரு நல்ல நாளைப் பெறலாம், ஒரு மோசமான நாளையும் பெறலாம், ஆனால் நீங்கள் அடிப்படைகளிலிருந்து விலகிச் செல்லக்கூடாது. இந்த சூழ்நிலையில் அர்ஷ்தீப்புக்கு இது மிகவும் கடினம். கடந்த காலத்திலும், அவர் நோ-பால் வீசியுள்ளார் என்றார்.
எந்த வடிவத்திலும் நோ-பால் செய்வது குற்றம் என்று எங்களுக்குத் தெரியும். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும், பவர்பிளே எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. நாங்கள் சில அடிப்படை பிழைகளை செய்துள்ளோம், இந்த நிலையில் நாங்கள் அதை செய்யக்கூடாது. அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். நமக்கான கற்றல் என்னவென்றால், நாம் எதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.